நண்பேன்டா....
அவனவன் பத்து பதினைஞ்சி பிரண்ட வச்சுக்கிட்டு ஜாலியா இருக்கான். நான் ஒரு பிரண்ட வச்சிக்கிட்டு நான் படுற பாடு அய்யய்யோ தாங்க முடியலடா சாமி. என்னங்க பாஸ் படத்தோட டயலாக் மாதிரி இருக்குன்னு பாக்குறீங்களா? அந்த படத்தில் மட்டும் இல்லைங்கோ ஒவ்வொருத்தர் வாழ்விலும் ஒரு பிரண்டால நல்லது நடந்தால் இன்னொரு பிரண்டால ஆப்பும் கிடைக்கும் அதே கதைதாங்க எனக்கும். அந்த சோக கதைய கேளுங்க.
சத்யா என்கிற சத்யானந்தம் நான், ஆர்யன் எனக்கு இருக்குற ஒரே பிரண்டுங்க அவன எதுல சேக்குறதுன்னெ தெரியலங்க. அப்பாவியா இல்லை அட பாவியான்னு தெரியலிங்க. காலேஜ் படிக்கும் போது லெக்சருக்கே லவ் லெட்டர் கொடுத்தாங்க. அது கூட பரவாயில்லைங்க அத எழுதறதுக்கே நான் தான் ஐடியா கொடுத்தேன்னு போட்டு கொடுத்து பிரின்ஸ்பால் கிட்ட மானாவாறியா திட்டும், வூட்ல தர்ம அடியும் வாங்கி கொடுத்த புண்ணியவான்க.
ஏண்ட இப்படி செஞ்சேன்னு கேட்டா "மச்சி நீதாண்ட சொன்ன ஒரு பொண்ணுகிட்ட லவ்வ எப்படி புரபோஸ் பண்றதுன்னு"